Categories
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் (Sri Tyagaraja Svamigal) Ragam The Lost Melodies (TLM) Valajapettai Venkataraman Bhagavathar

A kriti a day keeps Yama away – 6!

Remembering a person 174 years after his disappearance from this world is really noteworthy. This shows the contribution made by the person to the field of music.

Svamigal has cataloged many of the events that happened in his life. These events can be identified if careful scrutiny of his compositions were done. One such kriti with vital internal evidence is ‘paritapamu ganiyadina’. This kriti expresses an array of emotions like disappointment, anguish, and sorrow. This also elaborates a dream Svamigal had, perhaps when he was in his fag end. Sri Ramachandra makes a promise to Svamigal that he will grace him in 10 days !

Herewith we provide a rendition of ‘paritapamu’ as notated in Valajapettai manuscripts. This will be much different from the concert versions and we made the following changes:

1.      The refrain is stopped at ‘marachitivo’ and not at ‘paritapamu’ (commonly heard). The refrain stopping at this point makes more sense when joined with anupallavi and caranam. Also, the meaning of the pallavi looks more complete.

2.      The pause between the various sections namely pallavi, anupallavi and caranam is much reduced to display the disappointment, anguish, and urgency to get the grace, expressed in this kriti.

3.      The sahitya is not repeated in parts but as a complete line to convey the meaning in an uninterrupted manner.

Whereas the concert forms might be appealing to the majority, these obsolete versions, when modified to suit the sahitya bhava, conveys the idea of the composer in a better form.

Though singing panca ratna keertanas is now synonymous with Tyagaraja Aradhana, this author feels the kritis like ‘paritapamu, ‘giripai’ or ‘daya juchutaku’ can be included as a part of Aradhana. They not only remind the last days of Svamigal, but also his vision, interactions, and personal communications with his Sri Ramachandra in his own words.

This post is the last in the six-day long tribute series. 

நாள் ஆறு

ஆயிற்று. 174 வருடங்களுக்கு முன் இன்னாளில் ஸ்வாமிகள் முக்தி அடைந்திருப்பார். ஒருவர் முக்தி அடைந்து சுமார் 200 வருடங்களுக்கு பிறகும் அவரை ஞாபகம் வைத்து அதனை நினைவு கூர்வது என்பது பெரிய விஷயம்.

ஸ்வாமிகள் அவர் வாழ்வில் நடந்த பல விஷயங்களை தனது க்ருதிகளில்  குறிப்பிட்டுள்ளார். அவற்றில் மிக முக்யமான க்ருதி ‘பரிதாபமு கனியாடின’ என்று ஆரம்பிக்கும் கீர்த்தனம்.

வெகு நாளைய எதிற்பார்ப்பு நடக்காமல் போனதால் ஏற்படும் ஏமாற்றம், அந்த இயலாமையால் ஏற்படும் கோவம், தனக்கு ப்ரியமானவர் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லையே என்கிற ஆதங்கம், தான்  நம்பிய, ‘ஒரு சொல்’ என்றிருக்கக்கூடிய இஷ்ட தேவனே செவி சாயாமல் இருப்பதால் உண்டாகும் பரிதவிப்பு என்று பல எண்ணக்கோட்டையால் எழுப்பப்பட்ட க்ருதி இது. மனோஹரி என்று இதன்  ராகம் குறிப்பிடப்பட்டாலும் அது சரியாக இருக்க முடியாது என்று ஆராய்ச்சியில் தெரிய வருகிறது.

இங்கு பாடப்பட்டுள்ள வாலாஜாபேட்டை பாடம் மிகவும் தனித்துவமானது.  ஏனெனில் மேலே சொன்ன எல்லா உணர்ச்சிகளையும் அழகாக வெளிக்கொணர்ந்த பாடம். இங்கு பாடப்ப்படுள்ள விதமும் இப்பொழுது கச்சேரியில் கேக்கும் விதத்திலிருந்து மாறுபட்டே இருக்கும். அதற்கான காரணம்:

  1. பல்லவி பாடும் இடங்களில் ‘பரிதாபமு’ என்று நிறுத்தாமல்  ‘மறசிதிவோ’ என்றே முடித்துள்ளேன். ஒரு முழுமையான அர்தத்தை இது கொடுக்கிறது.
  2. பல்லவி, அனுபல்லவி மற்றும் சரணம் இடையே மிகுந்த இடைவெளி கொடுக்கவில்லை. இப்படி பாடுவது இந்த சாஹித்ய பாவத்தை கூட்டுகிறது.
  3. சாஹித்யத்தை அங்கங்கு இருமுறை பாடாமல், ஒரு வரியை முழுவதுமாகவே திரும்ப பாடியுள்ளேன்.

கச்சேரியில் பாடப்படாத இவ்வகை வேறுபாடுள்ள கீர்த்தனைகள் (versions), வித்யாசமான பாவத்தைக்கொடுக்கிறது என்பதில் ஐயமில்லை.

இந்த கீர்த்தனம் ஸ்வாமிகளின் கடைசி உருப்படிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த கீர்த்தனத்தையும், இதைப்போலவே அர்த்தமுள்ள ‘கிரிபை’ என்னும் கீர்தனத்தையும் ஆராதனையின் போது பாடுவது மிகவும் அர்த்த புஷ்டியாக இருக்கும் என்பது என் தாழ்மையான எண்ணம்.

கடந்த ஆறு நாட்களாக நடைபெற்ற  ஸ்ரீ த்யாகராஜ அஞ்சலி இன்றோடு நிறைவுருகிறது

ஸ்ரீ த்யாகராஜ சஹாயம்

ஸ்ரீ த்யாகராஜ குரு பாதுகாப்யாம் நமஹ

ஸ்ரீ த்யாகராஜ குரு பரப்ரஹ்மணே நமஹ

Leave a comment