Categories
Syama Sastrigal

ஆதரி ஷ்யாமக்ருஷ்ண சஹோதரி

சங்கீத மூவர் என்று குறிப்பிடுகையில் ஸ்ரீ ஸ்யாமா சாஸ்த்ரிகளை சேர்த்துக் கொள்வதுண்டு. ஆனால் மற்ற இருவர், ஸ்வாமிகள் மற்றும் தீக்ஷிதரின் கீர்த்தனங்களை போன்று இவர் க்ருதிகள் அதிகம் பாடப்படுபவதில்லை என்பதே உண்மை. மற்ற இருவரின் கீர்தனங்கள் பலதும் பாடப்படுவதில்லையே என்ற கேள்வி எனக்கு கேக்கிறது. ஆனல் மூவரின் படைப்புகளை ஒப்பிடுகையில் இவரின் கீர்தனம் ப்ரசாரத்தில் குறைவாகவே இருக்கிறது. இதற்கு காரணங்கள் பல.

பொதுவாக ஸ்வாமிகளின் க்ருதிகள் என்று சொன்னவுடன் அவருக்கும் அவருடைய இஷ்ட தெய்வமான ஸ்ரீ ராம சந்த்ர மூர்திக்குமான சம்பாஷனமே ஞாபகத்திற்கு வரும். தீக்ஷிதர் க்ருதிகள் என்றால் ஒரு ஶ்லோகத்திற்கு மெட்டமைத்தது போல் ஒரு எண்ணம் வரும். இவை இரண்டிற்கும் இடைப்பட்டவை தான் ஸ்யாமா சாஸ்த்ரிகளின் கீர்த்தனங்கள்.

பொதுவாக அம்பாளை தன்னுடைய தாயாக பாவித்து அவளுடைய க்ருபை தனக்கு கிடைக்க வேண்டும் என்றே பாடியிருக்கிறார். ஸ்ரீ வித்யா உபாசகராக இருந்தும் அதனுடைய அறிகுறிகள் எதுவும் இவர் க்ருதிகலில் சுலபமாக பார்த்து விட முடியாது.

மிகவும் அரிதான உருப்படி ஒன்று இவர் க்ருதிகளில் வித்யாசமாக மிளிர்கிறது. இதில் ‘பரஞ்சோதியே ஐவருக்கும் அனாதியே’ என்ற மிக புஷ்டியான ஸ்ரீ வித்யா தத்துவத்தை ஒரே வரியில் குறிப்பிட்டிருக்கிறார்.   இதை கச்சேரிகளில்  கேட்டிருந்தால் நீங்கள் மஹா பாக்யசாலி.  தீக்ஷிதர், வேங்கடரமண பாகவதர் போன்று இவரும் கீதம், வர்ணங்கள் இயற்றியிருக்கிறார். இந்த உருப்படி கீதமாக போனதால் கச்சேரிகளில் பாடப்படும் பாக்யமும், காலத்தினால் ஏற்படும் அலங்காரங்களும் இந்த உருப்படிக்கு கிடைக்கமல் போய் விட்டது.

‘மானமறியா மூடரை தானே மதிக்கக்காரணம் ஏனம்மா உன் பெருமை தானம்மா’ என்று யாரை குறிப்பிடுகிறாரோ, அவருக்கே தெரியும்?

இந்த கீதத்தை அவர் சமஸ்க்ருதம், தமிழ் மற்றும் தெலுங்கில் இயற்றியிருக்கிறார். அதாவது சாஹித்யம் மூன்று, அதற்கான மெட்டு ஒன்று ! அந்த காலத்தில் இது ப்ரசித்தம் போல. தஞ்சை நால்வரின் சாஹித்யங்களிலும் இதைக்காணலாம்.

தீக்ஷிதரின் பரஜு ராகத்தை கங்கையுடன் ஒப்பிட்டோமேயானால், சாஸ்த்ரிகளின் பரஜுவை தஞ்சாவூர் காவிரியுடன் ஒப்பிடலாம். முன்னவரது பரஜு மிகவும் வேகமாக, ஆர்பாட்டத்துடன், ப்ரஹ்மாண்டமாக  வடிவமைக்கப்பட்டிருக்கும். பின்னவரது பரஜு, அமைதியாக, அதே சமயம் மிகுந்த ஆழத்துடனும், கொஞ்சம் தவறினாலும் நாம் தவறி விடுவோம் என்று கையாளப்பட்டிருக்கும். இப்பொழுது இருக்கும் பரஜு ?

இவர், அவர் பூஜித்த அம்பாளுடன் ஒன்றான தினமான மாசி தசமியில் இந்த அபூர்வ சாஹித்யத்தை பருகுவோம்.

Leave a comment